ADDED : ஜூலை 05, 2025 12:50 AM
புத்தக தானம்
மதுரை: ஜீவநதி அறக்கட்டளையின் கலை மற்றும் இலக்கிய பிரிவு சார்பில் பரவை மங்கையர்க்கரசி கல்லுாரி நுாலகத்திற்கு 300 புத்தகங்கள் தானமாக வழங்கப்பட்டன. முதல்வர் உமாவிடம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆறுமுக ரகுபதி, பாலகிருஷ்ணன், செந்தில்குமார், பரூக் புத்தகங்களை வழங்கினார். டீன் செந்துார் பிரியதர்ஷனி உடனிருந்தார்.
மாணவர்கள் அறிவுச்சுற்றுலா
பேரையூர்: அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளி, ராமையா நாடார் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் அறிவுசார் சுற்றுலா சென்றனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.
அங்குள்ள அதிகாரிகள் மாணவர்களுக்கு ராக்கெட் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். எதிர்கால ஆராய்ச்சிக்கு மாணவர்களை வழிநடத்துவதாக அறிவுச் சுற்றுலா இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் கூறினர். பள்ளித்தாளாளர் சுதந்திரசேகரன் ஏற்பாடு செய்திருந்தார். மெட்ரிக் பள்ளி தாளாளர் மாரியப்பன், உதவித் தலைவர் சுந்தரமூர்த்தி, தலைமை ஆசிரியர் முத்தழகு, பள்ளி முதல்வர் கற்பகமலர் பங்கேற்றனர்.