ADDED : ஆக 09, 2025 04:05 AM
தேசிய கருத்தரங்கு திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில் செயற்கை நுண்ணறிவும் ஆங்கில இலக்கியமும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். பேராசிரியர் மவுஷ்மி வரவேற்றார். கர்நாடகா மத்திய பல்கலை பேராசிரியர் பிரகாஷ் பாலிக்காய், கோவை அரசு கல்லுாரி இணை பேராசிரியர் சுப்ரமணியன் பேசினர். பேராசிரியர்கள் சிவக்குமார், கவிதா, புவனேஸ்வரி அறிமுக உரையாற்றினர். பேராசிரியர் ஸ்ரீகணேசன் நன்றி கூறினார். துறைத் தலைவர் சிவபாலன், பேராசிரியர்கள் ராம்பிரசாத், கலைவாணி, நந்தினி, சுமித்ர, விக்னேஷ் ஒருங்கிணைத்தார்.
மென்திறன் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் 'சிறிய பழக்கங்கள் பெரிய மாற்றங்கள்' என்ற தலைப்பில் மென் திறன் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சூரியதர்ஷினி வரவேற்றார். மதுரை கல்லுாரி பேராசிரியர் கிருத்திகா பேசினார். மாணவர் லோகதர்ஷன் நன்றி கூறினார்.
முதலாமாண்டு துவக்க விழா மதுரை: பரவை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா தாளாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. கல்லுாரி இயக்குநர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார்.முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா, 'மாணவர்கள் வாழ்வின் துவக்கம் சிறப்பாக இருக்கவும், இலக்கை எட்டவும் அயராது உழைக்க வேண்டும்' என்றார். துணை முதல்வர் விக்னேஷ் உட்பட கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விளையாட்டு தின விழா உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியின் 56வது விளையாட்டு தின விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜெயபாஸ்கரன் வரவேற்றார். கல்லுாரி அதிபர் பேசில் சேவியர், செயலாளர் அந்தோணிசாமி, முதல்வர் அன்பரசு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன், கன்னியாகுமரி வணிக கடற்படைத் தலைவர் ரிண்டோ ஆண்டனி, தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் இளமகிழன் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் வனிதா விளையாட்டு அறிக்கையை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
கியூ.ஆர்., கோடு மூலம் மரங்கள் விவரம் மதுரை: சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரங்களுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியும், அந்த மரம் பெயர், பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை கியூ.ஆர்., கோடு மூலம் அறியும் வசதியும் துவக்கப்பட்டது. நாட்டுநலப்பணித்திட்டம் மாணவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் பாண்டி, விமலா முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட மரங்களுக்கும் கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து, அந்த மரங்களின் பெயர், மரம் பற்றிய முழு அறிவியல் விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்நடவடிக்கை மேற்கொண்ட மாணவர்களை ஆசிரியர்கள் பிரபு, சிவா ஒருங்கிணைத்தனர்.
நிறுவனர் நினைவு தினம் வாடிப்பட்டி: பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளி நிறுவனர் பொன்னுத்தாய் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளி குழுத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். செயலாளர் நாகேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பொன்னுத்தாய் கடந்து வந்த பாதைகள் என்ற தலைப்பில் மாணவர்கள் பேசினர். விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சீதாலட்சுமி, பொறியாளர் கண்ணன் பரிசு வழங்கினர். நிகழ்ச்சிகளை ஆசிரியை எஸ்தர் டார்த்தி ஒருங்கிணைத்தார். ஆசிரியை ரெக்ஸ்லின் மேரி நன்றி கூறினார்.
உலக யானைகள் தினம் மதுரை: எல்.கே.பி., நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியை சித்ரா வரவேற்றார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
தென்னவன் கூறுகையில், ''சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், விவசாயத்திற்கும், காடுகளை வளர்க்கவும் உதவுகின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சியில் பெரும் பங்கு யானைகளுக்கு உண்டு. கண்ணாடியைப் பார்த்து தன்னை அடையாளம் காணும் உயிரினங்களில் யானையும் ஒன்று'' என்றார். வினாடி வினாவில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.
கண் பரிசோதனை முகாம் மதுரை: பாத்திமா கல்லுாரியில் ஸ்ரீராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் முதல்வர் பாத்திமா மேரி தலைமையில் நடந்தது. இளம் வயதினரிடையே அதிகம் காணப்படும் பார்வை குறைபாடுகள், நீண்ட நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் கண் சோர்வு போன்ற பிரச்னைகள் குறித்து டாக்டர் கரோலைன் விளக்கினார். பார்வை குறைபாடுகளுக்கான பரிசோதனைகள், கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, டாக்டர்களின் ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 520 பேர் பயன்பெற்றனர்.முகாமை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.
காந்திய கருத்தரங்கு மதுரை: காமராஜ் பல்கலை கல்லுாரியில் தேசிய காந்தி மியூசிய இயக்குநர் அண்ணாமலை தலைமையில் காந்திய சிந்தனைக் கருத்தரங்கம் நடந்தது.காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் பேசியதாவது: பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் அகிம்சை இல்லாததே. பிறருக்கு தீமை செய்யக்கூடாது என கவனமாக இருந்தவர் காந்தி. மாணவர்கள் வாழ்வில் சாதிக்க காந்தியின் வழியை பின்பற்றுவது அவசியம். போர் ஒருபோதும் தீர்வை தராது என்றார். காந்திய சிந்தனைக் கல்லுாரி முதல்வர் சேதுராக்காயி, காந்திய நினைவு க் கல்லுாரி இயக்குநர் ஆண்டியப்பன், காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், மதுரை காமராஜ் கல்லுாரி முதல்வர்(பொறுப்பு) ஜார்ஜ், துணை முதல்வர் கபிலன் கலந்துகொண்டனர்.