ADDED : ஆக 15, 2025 02:46 AM
போதை தடுப்பு விழிப்புணர்வு உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடந்தது. தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம், உதவித் தலைமை ஆசிரியர்கள் பிரசாத், மாரியப்பன், ஜெயக்குமார் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் போதையில் இருந்து மனிதம் காப்போம் அமைப்பின் இயக்குநர் விக்டர் தாஸ், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் கதிர்வேல் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபிரபு, தமிழ்ச்செல்வம் ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்தரங்கு திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் தொழில் கனவு மற்றும் வெற்றிகரமான வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவர் மணிவண்ணன் வரவேற்றார். தனியார் நிறுவன இணை நிறுவனர் துர்காதேவி பேசினார். மாணவி சாரிகா நன்றி கூறினார். துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் சுப்ரமணியராஜா, பிரெடி பிளெசன், தினேஷ்குமார் ஒருங்கிணைத்தனர்.
மருத்துவ முகாம் எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், தன்வந்திரி பாரம்பரிய அக்குபஞ்சர் சிகிச்சை மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முதல்வர் செல்வக்குமாரி, நிர்வாக அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அசோக்குமார், பாலசுப்பிரமணி, சிவபாலா, ராஜ்கமல், ஜெகதீஷ், உமாமகேஸ்வரன் பரிசோதித்தனர். என்.எஸ்.எஸ்., மாணவியர், திட்ட அலுவலர்கள் பாண்டிச்செல்வி, மீனா ஏற்பாடு செய்திருந்தனர்.