ADDED : ஆக 19, 2025 01:11 AM
கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இயற்கை துறை சார்பில் ஆஸ்திரிய இயற்பியல் மேதை ஏர்வின் சுரோடிங்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் பேசினார். மாணவி நிவேதிதா அறிமுக உரையாற்றினார். மாணவர் ராஜபாண்டி நன்றி கூறினர். பேராசிரியர் ஹேமலதா ஒருங்கிணைத்தார்.
மாணவர்களுக்கு வரவேற்பு
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரி கணினி துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சரவணன் பேசினர். கணினித்துறை தலைவர் ஜெயந்தி வரவேற்றார். பேராசிரியர் நேத்திர நந்தினி தொகுத்துரைத்தார். சீனியர் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி முதலாம் ஆண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். பேராசிரியர் ஞானேஷ் நன்றி கூறினர்.
மாணவர்கள் சாதனை
மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி ஊரக வளர்ச்சித்துறை மாணவர்கள் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இரண்டாம் ஆண்டு மாணவர் பிரபு முதலிடம் பெற்று தங்கம், மாணவி நிதர்சனா இரண்டாம் இடம் வென்று வெள்ளி பதக்கங்கள் வென்றனர். இவர்களை முதல்வர் பால்ராஜ், துறைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
மாணவிகள் களப் பயணம்
மதுரை: பாத்திமா கல்லுாரியில் மத்திய அரசின் 'உன்ன பாரத் அபியான்' என்ற கிராமங்களை தத்தெடுத்தல் மற்றும் செயல்பாடுகள் மூலம் சமூகத்தை சென்றடைய செய்தல் (ரோசா) திட்டங்கள் சார்பில் மாணவிகள் களப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.சோழவந்தான், கொண்டையம்பட்டி, அம்பலத்தடி, நெடுங்குளம், தண்டலை, டி.ஆண்டிபட்டி, திருமால்நத்தம் கிராமங்களில் கிராம சபை கூட்டங்களில் மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியைகள் அஸ்நெட் மேரி, சோபியா, சாந்தி, பெர்னிதா, பூர்ணிமா, விஜயசாந்தி, சுகன்யா ஒருங்கிணைத்தனர்.