ADDED : செப் 16, 2025 04:34 AM
சொற்பொழிவு மதுரை: தியாகராஜர் கல்லூரி தமிழ்த் துறையில் மாணவிகள் வழிகாட்டுதல் மையம் சார்பாக இருபாலர் மனநலம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் எனும் தலைப்பில் உரை நிகழ்ச்சி நடந்தது. துறைத் தலைவர் காந்தித்துரை தலைமை வகித்தார். அமெரிக்கன் கல்லுாரி உதவிப்பேராசிரியை கயல்விழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்வை பொறுப்பாசிரியர்களாக முத்தமிழ், தமிழ்மொழி ஒருங்கிணைத்தனர்.
கருத்தரங்கு பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் கிராமப்புற மகளிர் மற்றும் மாணவர்களுக்கான அழகு கலை நிபுணம் குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். அழகு கலை நிபுணர் ஜீவிதா பேசினார். பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், இருளப்பன் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் தமீம் அசாருதீன் நன்றி கூறினார்.
தொழில் முனைவோர் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம்: திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் வணிகத்தில் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி வைஷ்ணவி வரவேற்றார். உதவி பேராசிரியர் கீர்த்திகா அறிமுக உரையாற்றினார். மீனாட்சி அரசு கலைக்கல்லுாரி இணைப் பேராசிரியர் மீனாட்சி பேசினார். மாணவி அக் ஷயா நன்றி கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மதுரை : லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரியுடன் மின்னணுவியல், கணினி தொழில்நுட்பத்திற்கான அகில இந்திய சமூகம் (ஏ.ஐ.எஸ்.இ.சி.டி.,) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஏ.ஐ.எஸ்.இ.சி.டி., நிபுணர் குழு, வேகமாக வளர்ந்து வரும் நிதிமற்றும் கணக்கியல் துறையில், அதிகத் திறன் கொண்ட நுழைவு நிலைபணிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்ய தொழில் சார்ந்த பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தவுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய 150 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சி முடித்த பின் கார்ப்பரேட், சேவைத் துறை நிறுவனங்களில் நிதி செயல்பாடுகள், வாடிக்கையாளர்சேவை துறைகளில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.