ADDED : பிப் 12, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோச்சடை செயின்ட் ஜான் மெட்ரிக் பள்ளியில் 24வது ஆண்டுவிழா நடந்தது. பாதிரியார் டேனி ஜான் வரவேற்றார். இத்தாலி, ரோம், ஜே.பி.ஐ.சி., ஆணைய இணைச் செயலாளர் வின்சென்ட் அனஸ்தாசியர் தலைமை வகித்தார்.
முதல்வர் ஆண்டனி பிரிமூஸ் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக மதுரை வருமானவரித்துறை (விசாரணை) கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு, டாக்டர் அருள்ராணி பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு, கேடயங்கள் வழங்கப் பட்டன.
