/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாதி சான்று கேட்டு 6வது நாளாக தொடரும் பள்ளி புறக்கணிப்பு
/
ஜாதி சான்று கேட்டு 6வது நாளாக தொடரும் பள்ளி புறக்கணிப்பு
ஜாதி சான்று கேட்டு 6வது நாளாக தொடரும் பள்ளி புறக்கணிப்பு
ஜாதி சான்று கேட்டு 6வது நாளாக தொடரும் பள்ளி புறக்கணிப்பு
ADDED : நவ 13, 2024 04:18 AM

சோழவந்தான் : பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் ஜாதி சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் 6வது நாளாக தொடர் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நவ.,11ல் மதுரை மெயின் ரோட்டில் பவர் ஹவுஸ் எதிரே போராட்டத்தை தொடர்ந்தனர். பல்வேறு கட்சி நிர்வாகிகள் போராட்டக் குழுவினரை சந்தித்து ஆதரவளித்து பேசினர். நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., ஷாலினி நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை.
போராட்ட குழுவினர் கலெக்டர் சங்கீதாவை சந்தித்தனர். அதிலும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நேற்று 6வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். ஜாதி சான்றிதழ் கேட்டு கையில் தட்டு ஏந்தி யாசகம் கேட்டும், வேட்டைக்கு பயன்படும் வலை, கூண்டுகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
மேலும் போராட்ட களத்திலேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர்.