ADDED : மார் 17, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வராண்டா சிலாப்பு பெயர்ந்து விழுகின்றன.
இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி அருகே கண்மாய் கரை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை கொட்டும் பகுதி உள்ளது. ஆங்காங்கே கருவேலம் மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளன.
சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இப்பள்ளி வகுப்பறையின் வராண்டாவில் உள்ள கான்கிரீட் சிலாப் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன.
மேலும் விரிசல்விட்டு விழும் அபாய நிலையில் பள்ளி உள்ளது. மாணவர்கள் நலன் கருதி மேற்கு ஒன்றிய நிர்வாகம் கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.