ADDED : அக் 02, 2024 07:11 AM
கல்வி உதவித்தொகை வழங்கல்
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 2வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சிவக்குமார் வரவேற்றார். செயலாளர் அமர்நாத் ஆண்டறிக்கை வாசித்தார். துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் விஷ்ணுகுமார், துணைத் தலைவர் அமர்சிங், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், ஹரிஹரசுதன், திருச்சி விமான நிலைய உதவி பொது மேலாளர் சிவக்குமார் பேசினர். முதல்வர் சீனிவாசன், முன்னாள் முதல்வர்கள் ராமலிங்கம், ரவீந்திரன், டீன் கவிதா, பேராசிரியர்கள் விஜயகுமார், அருண், ஹரி, நாதன், ஜெயந்தி, சுகந்தி, ராம் பிரசாத், கார்த்திக் மற்றும் முன்னாள் மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்டனர். சங்கம் சார்பில் தற்போதைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.32 ஆயிரம், மதிய உணவு திட்டத்திற்காக ரூ.28 ஆயிரம் வழங்கப்பட்டது.
வனவிலங்கு வாரவிழா
மதுரை: உலக வனவிலங்கு வாரம் அக். முதல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மதுரை பாத்திமா கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் 'எக்டீஸியா' என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடந்தன. துறைத் தலைவர் ஆண்டனி அமலா ஜெயசீலி வரவேற்றார். 6 கல்லுாரிகள் பங்கேற்றன. இயற்கையுடன் சகவாழ்வு உலகளாவிய கட்டாயம் என்ற கருத்தை மையமாக வைத்து விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜெரால்டு வில்சன், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்முயற்சி மற்றும் புதுமையான அணுகுமுறைகள் என்ற தலைப்பில் பேசினார். கடல் சுற்றுச்சூழலில் பிச்சாவரக் காடுகள், பவளப்பாறைகள், கடற்புற்களின் பங்குகளை குறித்தும், சுற்றுச்சூழல் மாசு, வளங்களை சுரண்டுதல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கினார். முதலிடம் பெற்ற திருவேடகம் விவேகானந்தா கல்லுாரிக்கு துணை முதல்வர் பாத்திமா மேரி பரிசு வழங்கினார். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.
துாய்மைப்பணி
அழகர்கோவில்: எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாணவர்கள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர் பிரதீபா தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் நவநீதகிருஷ்ணன், துணை முதல்வர் பிரசன்ன வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் விக்னேஷ் பாபு வழிநடத்தினார். தாளாளர் கணேசன், பொருளாளர் எஸ்.கே.பி.கண்ணன், நிதிச் செயலாளர் வெங்கடேசன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
சொற்பொழிவு
மதுரை கல்லுாரியில் காந்தி மியூசியம் சார்பில் காந்தி ஜெயந்தி சொற்பொழிவு நடந்தது. ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். மியூசிய பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் நன்றி கூறினார். மாணவிகள் ஹேமா, பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். மியூசிய செயலாளர் நந்தாராவ், காப்பாட்சியர் நடராஜன், பேராசிரியர்கள் ஷீலா கணேஷ், தீனதயாளன், கண்ணன், ஸ்டீபன், தலைமை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டனர்.