sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி கல்லுாரி செய்தி

/

பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி


ADDED : நவ 16, 2024 04:57 AM

Google News

ADDED : நவ 16, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலவச சைக்கிள் வழங்கல்


திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், சண்முகசுந்தரம், ராமையா, பள்ளி செயலாளர் சூரிய நாராயணன் ஆகியோர் 140 மாணவியருக்கு வழங்கினர். தலைமை ஆசிரியர் அருந்தவம், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி பட்டறை


பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் உன்னத் பாரத் அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உலக கருணை தினத்தை முன்னிட்டு கிராமப்புற மகளிர் குழுவினர் வாழ்வாதாரம் மேம்பட ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். பேராசிரியர் தனலட்சுமி, சாம்பிராணி, ஊதுபத்தி, பினாயில், கை கழுவும் திரவம், சோப்பு மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சுகாதார பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கினார்.

குழந்தைகள் தினவிழா


கள்ளிக்குடி: கரிசல்காளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் குழந்தைகள் தினவிழா நடந்தது. மாணவர்கள் நடனம், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், மோகன், தனலட்சுமி, பாண்டி தேவி, சங்கரேஸ்வரி ஏற்பாடு செய்தனர்.

* யா .ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆசிரியை மாலா முன்னிலை வகித்தார். ஆசிரியர் மோசஸ், ஷகிலாமாய் வரவேற்றனர். மாறுவேடம், பேச்சு, நடனம், கவிதை, பாடல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை மெர்சி தொகுத்து வழங்கினார். ஆசிரியைகள் பானு, ராஜேஸ்வரி, ரமா பிரபா, உமாராணி ஏற்பாடு

செய்தனர். ஆசிரியை முராத்பானு நன்றி கூறினார்.

சட்ட விழிப்புணர்வு


மேலுார்: கிடாரிபட்டி லதாமாதவன் பொறியியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேராசிரியர் கலா மாரீஸ்வரி வரவேற்றார். முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் காந்திநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட இலவச சட்ட உதவி மைய சார்பு நீதிபதி சரவண செந்தில்குமார் மாணவர்களுக்கு அரசியலைமைப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார். வழக்கறிஞர்கள் ராமசாமி, சாகுல்ஹமீது, செயல் அலுவலர் மீனாட்சிசுந்தரம், பிரபாகரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சண்முகலட்சுமி நன்றி கூறினார்.

விளையாட்டு விழா


மதுரை: பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் மழலையர் விளையாட்டு தினவிழா பள்ளி நிர்வாகி ஜெயவீரபாண்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தனர். ஜெ.ஆர்.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்வலம்


சோழவந்தான்: மண்ணாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கருப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ் புவனேஸ்வரன், மதுரை புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் ரதீஷ் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கிராம முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். புகையிலைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருமங்கலம்: வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான சிறப்பு முகாம் நவ. 16, 17, 23, 24 ல் நடக்கிறது. இதற்காக பி.கே.என்., ஆண்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., கண்ணன் தொடங்கி வைத்தார். தாசில்தார் மனேஷ்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில், பள்ளி செயலாளர் பார்த்திபன், பொருளாளர் நவநீதன், தலைமை ஆசிரியை ஜெயசாந்தினி, வருவாய் ஆய்வாளர்கள் அசோக்குமார், சந்திரலேகா, வீடியோ மக்கள் பாலமுருகன் சுரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us