ADDED : நவ 23, 2024 05:17 AM
விழிப்புணர்வு ஊர்வலம்
வாடிப்பட்டி: கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா துவக்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், மணிகண்டன், சதீஷ், புவனேஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
கட்டடங்கள் திறப்பு
மதுரை: மாநகராட்சி செனாய்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., பூமிநாதன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் சாந்தி, கல்வி அலுவலர் ரகுபதி,பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், தலைமையாசிரியை அரசமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் வருவாய்த்துறை, டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இணைந்து தேர்தல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம், வாக்களிப்பதன் கடமை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஆர்.டி.ஓ., ரவிசந்திரன் துவக்கி வைத்தார். தாசில்தார் பாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் முத்துலட்சுமி, பள்ளித் தலைமை ஆசிரியர் மார்க்கரெட் கிரேசியா உட்பட பலர் பங்கேற்றனர்.
மரக்கன்று நடுதல்
மதுரை: மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் காதக்கிணறு ஊராட்சியில் 100 மரக்கன்றுகள் நட்டனர். என்.எஸ்.எஸ்., ஆசிரியை முத்துமணி, வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நில மக்கள் இயக்கம் நிறுவனர் சோழன் குபேந்திரன் செய்திருந்தார். இதுவரை இந்த இயக்கம் சார்பில் 99 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
கூடுதல் கட்டடங்கள் திறப்பு
அவனியாபுரம்: மாநகராட்சி 92வது வார்டு அவனியாபுரம் ஆரம்பப் பள்ளி, எம்.எம்.சி. காலனியில் ஆரம்பப் பள்ளி, 100வது வார்டு ஆரம்பப் பள்ளி, 99வது வார்டு திருப்பரங்குன்றம் ஆரம்பப் பள்ளிக்கு கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். நகர்ப்பொறியாளர் ரூபன், மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், கருப்பசாமி, முத்துலட்சுமி கலந்து கொண்டனர்.

