/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கற்களால் விழுந்த பள்ளிப் பாதுகாப்பு சுவர்
/
ஜல்லிக்கற்களால் விழுந்த பள்ளிப் பாதுகாப்பு சுவர்
ADDED : ஆக 05, 2025 06:37 AM

சோழவந்தான்: சோழவந்தானில் ரயில்வே பணி களுக்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லியால் அரசஞ்சண்முகனார் மேல்நிலைப் பள்ளியின் 'காம்பவுண்ட்' சுவர் விழுந்தது.
இங்குள்ள ஆலங்கொட்டாரத்தில் நுாறாண்டுகளைக் கடந்த அரசஞ்சண்முகனார் மேல்நிலைப்பள்ளி செயல் படுகிறது. பள்ளிக் கட்டடங்கள் சேத மடைந்து அழியும் நிலையில் இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.பல கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இப் பணியின்போது பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு (காம்பவுண்ட்) சுவர் அமைத்து புதுப்பிக்கப்பட்டது.
சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் 'பிளாட்பாரம்' முடியும் இடம் அருகே இப்பள்ளி உள்ளது. பாதுகாப்புச் சுவரின் பின்புறம் ரயில்வே டிராக்குகள் உள்ளன. தற்போது ரூ.பல கோடி செலவில் ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கூடுதல் டிராக்குகள் அமைக்கப்படுகின்றன.
இப்பணிகளுக்காக பள்ளிச் சுற்றுச் சுவரையொட்டி பின்புறம் 50 மீ., நீளத்திற்கு ஜல்லிக்கற்கள் கொட்டப் பட்டிருந்தன. இதன் பாரம் தாங்காமல் சுற்றுச்சுவர் இடிந்து ஒரு பகுதி முழுவதும் விழுந்தது. மீதமுள்ள சுவரும் விழும் நிலையில் உள்ளது.
காலை ஏழு மணிக்கு சம்பவம் நிகழ்ந்ததால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை. பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். ரயில்வே பொறியாளரிடமும் விவரம் தெரிவித்துள்ளோம். விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.