/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பல்கலை இறகுப்பந்து போட்டி: சவுராஷ்டிரா கல்லூரி சாம்பியன்
/
பல்கலை இறகுப்பந்து போட்டி: சவுராஷ்டிரா கல்லூரி சாம்பியன்
பல்கலை இறகுப்பந்து போட்டி: சவுராஷ்டிரா கல்லூரி சாம்பியன்
பல்கலை இறகுப்பந்து போட்டி: சவுராஷ்டிரா கல்லூரி சாம்பியன்
ADDED : ஆக 05, 2025 06:17 AM

திருப்பரங்குன்றம் : மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல இறகுப் பந்து போட்டிகளில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
விவேகானந்தர் கல்லுாரியில் நாக் அவுட் முறையில் நடந்த இப் போட்டிகளில் 7 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியினர் 3-1 என்ற செட் கணக்கில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி அணியை வென்று சாம்பி யன் பட்டம் பெற்றனர். சவுராஷ்டிரா கல்லுாரி 9வது ஆண்டாக இச்சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழாவில் விவேகானந்தா கல்லுாரி உடற் கல்வி இயக்குனர் நிரஞ்சன் வரவேற்றார். துணை முதல்வர் சந்திரசேகர் பரிசளித்தார். மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல கன்வீனர் கதிர்வேல் பாண்டியன் நன்றி கூறினார்.
சாம்பியன் பட்டம் பெற்ற சவுராஷ்டிரா கல்லுாரி அணி வீரர்களை கல்லுாரித் தலைவர் பன்ஷிதர், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், விளையாட்டு குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கணேசன், பாலாஜி, செந்தில், ஜீவப்பிரியா, விஷ்ணு பிரியா பாராட்டினர்.