ADDED : மே 07, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று துவங்கியது. வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆய்வு செய்தார். ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் மேற்பார்வை செய்தார். டயர், பிரேக், சி.சி.டி.வி., கேமரா, அவசர வழி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் தனியார் வாகனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

