நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : பரவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 127வது ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியை புவனேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வள மைய மேற்பார்வையாளர் காமாட்சி முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியங்கா வரவேற்றார். கல்வி, கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணியாற்றிய கண்ணம்மாள், சுமதிஇந்திரா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

