/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி மாணவி கர்ப்பம்; கலெக்டரிடம் புகார்
/
பள்ளி மாணவி கர்ப்பம்; கலெக்டரிடம் புகார்
ADDED : ஜூலை 05, 2025 12:58 AM
மதுரை; மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகள் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். கணவர் பிரிந்து சென்ற நிலையில் தாயும், மகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் மாணவி கர்ப்பமுற்றார். விசாரணையில் பள்ளிக்கு பஸ்சில் செல்கையில் ஒருவர் பழக்கமாகி காதலித்தது தெரிந்தது. அவரது முகவரி தெரியாத நிலையில், அலைபேசியும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.
ஆறுமாத கர்ப்பிணியான அம்மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையறிந்த மாவட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் முத்துக்குமார், மாணவியை கலெக்டர் பிரவீன்குமாரிடம் அழைத்து வந்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைவர் பிரேமா தலைமையில் விசாரணை நடக்கிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின் அரசு காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.