நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். பல்வேறு தலைப்புகளில் உருவாக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் வெகுவாக கவர்ந்தன. இஸ்ரோ முன்னாள் பொது மேலாளர் டேவிட்தாசன் பேசினார். முதுகலை உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.