ADDED : நவ 18, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலகத் தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி. சந்தோஷத்திற்கு, அவரது தமிழ்ப் பணிக்கும், 189 திருவள்ளுவர் சிலைகள் நிறுவியதற்கும் தமிழ் திரைக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மதுரையில் பாராட்டு விழா நடந்தது.
அவருக்கு 'வள்ளுவர் செல்வம்' என்ற விருதை குரு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பாலமுருகன் வழங்கினார். மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி, உலகத் திருக்குறள் பேரவை கவுரவ தலைவர் காத்திகேயன், தமிழ்த்திரைக் கலைஞர்கள் நலச்சங்கத் தலைவர் ரே, தேனி சனீஸ்வரா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், கலைஞர்கள் நலச்சங்கப் பொதுச் செயலாளர்கள் கனகு, அமலா ராணி பங்கேற்றனர்.

