ADDED : நவ 18, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து துறை இணைந்து விதிமீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து சோதனை நடத்தினர்.
மதுரை நகரில் மூன்றுமாவடி பகுதியில் ஒலி அளவீட்டு கருவியை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் பிடிபட்டன.
இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் போலீஸ் உதவி கமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர் சோபனா, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் முரளிதரன் பங்கேற்றனர்.

