/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திர சாவடி ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் சிற்பத்துறை ஆய்வாளர் வலியுறுத்தல்

ADDED : பிப் 01, 2024 05:12 AM

ஒத்தக்கடை : 'மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதி பெருமாள்மலை அடிவாரச் சாவடியில் வரையப்பட்டுள்ள பழங்கால ராமாயண ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்' என, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: கி.பி.17 ஆம் நுாற்றாண்டில் ராமாயண நிகழ்வுகளை இயற்கை மூலப்பொருட்களான பல மூலிகைகளால் இங்கு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இச்சாவடியின் கூரை முழுவதுமாக இடிந்து விட்டதால் இதில் உள்ள ஓவியங்கள் பாதிக்கும்மேல் மழை நீரால் அழிந்து விட்டது. எஞ்சியுள்ள ஓவியங்களை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது இவை இடிந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. இதன் முழுமையான ஓவியங்களை பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆவணப்படுத்தி உள்ளது.
300 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இந்தச் சித்திர சாவடியில் உள்ளன. இச்சாவடி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ராமாயண கதையை தொடர் ஓவியங்களாக வரைந்திருப்பது சிறப்பு.
தற்போது அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்திருப்பதால் அதனுடன் தொடர்புடைய நம் நாட்டில் உள்ள ஓவியங்கள், மண்டபங்கள், முக்கிய ஸ்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதற்காக தொல்லியல் துறை, கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்துள்ளோம், என்றார்.