/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுமதியில்லாத கட்டடத்திற்கு 'சீல்'
/
அனுமதியில்லாத கட்டடத்திற்கு 'சீல்'
ADDED : ஜன 11, 2024 04:25 AM
மதுரை : மதுரை மத்திய மண்டலம் 67 வது வார்டு விராட்டிபத்தில் மாநகராட்சியின் வரைபடம் அனுமதி பெறாமல் விதிமீறி கட்டப்பட்ட மாடி கட்டடத்திற்கு உதவி செயற்பொறியாளர் கனி, உதவி பொறியாளர் ரகுநாதன் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வரைபடம் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் விராட்டிபத்தைச் சேர்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான கட்டடத்தின் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மீது பாரபட்சமின்றி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.