ADDED : அக் 16, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு பகுதியில் தீபாவளிக்கு விற்பனை செய்ய வீட்டில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ., அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாலமேடு மணிக்கூண்டு அருகே கரிகாலன் 58, என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அங்கு தலா 20 கிலோவில் ரூ.ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 58 பண்டல் பட்டாசுகள் இருந்தன. பட்டாசு பதுக்கிய பகுதிக்கு போலீசார் சீல் வைத்து கரிகாலனை கைது செய்தனர்.