/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் கல்வித்துறையும் முதலிடம் பெற வேண்டும் செயலாளர் சந்திரமோகன் வலியுறுத்தல்
/
தமிழகத்தில் கல்வித்துறையும் முதலிடம் பெற வேண்டும் செயலாளர் சந்திரமோகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கல்வித்துறையும் முதலிடம் பெற வேண்டும் செயலாளர் சந்திரமோகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கல்வித்துறையும் முதலிடம் பெற வேண்டும் செயலாளர் சந்திரமோகன் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2025 03:56 AM
மதுரை: தமிழகத்தில் பிற துறைகள் போல் கல்வித்துறையும் முதலிடம் பெற வேண்டும் என அத்துறை செயலர் சந்திரமோகன் தெரிவித்தார்.
மதுரையில் ஒத்தக்கடை, சருகுவலையப்பட்டி, பாப்பாகுடிப்பட்டி, மேலுார் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளை சந்திரமோகன் பார்வையிட்டு, மாணவர்களின் வாசிப்பு திறனை ஆய்வு செய்தார். பின் கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில் அவரது தலைமையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.
சந்திரமோகன் பேசியதாவது: அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரேமாதிரியான நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது. பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர் கல்வித்தரம் குறைவாகவும், சில பள்ளிகளில் நிறைவாகவும் உள்ளது. இந்த இடைவெளியை ஆசிரியர்கள் குறைக்க வேண்டும்.
பள்ளி ஆய்வுக்கு சென்றபோது 9ம் வகுப்பில் சில மாணவர்கள் ஆங்கிலம் வாசிக்க திணறுகின்றனர். சிலருக்கு வாசிக்கவே தெரியவில்லை. இதுபோன்ற குறைபாடுகளை 3 மாதங்களுக்கு சரி செய்ய வேண்டும். மாநிலத்தில் பிற துறைகள் போல் கல்வித்துறையும் 'நம்பர் ஒன்' ஆக வரவேண்டும். மாநில அடைவு தேர்வில் (சிலாஸ்) மூன்றாமிடத்தில் உள்ள மதுரை முதலிடம் பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
தேசிய அடைவு (சிலாஸ்)தேர்வில் மதிப்பெண் பெற்ற பள்ளிகளை சந்திரமோகன் பாராட்டினார். குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளை குறிப்பிட்டு சரிசெய்ய வேண்டும் என எச்சரித்தார். நிகழ்ச்சியில் இணை இயக்குநர்கள் ஞானகவுரி, வை.குமார், சி.இ.ஓ., ரேணுகா பங்கேற்றனர்.