ADDED : ஆக 07, 2025 06:54 AM
மதுரை: பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடனான பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 60 பங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கமிஷனர் பேசியதாவது:
அனைத்து பெட்ரோல் பங்க் வளாகம், ரோட்டை பார்த்தவாறு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
யாருக்கும் எந்தவித பாட்டில்களிலும் சில்லரை விற்பனையாக பெட்ரோல் விற்கக் கூடாது. அசம்பாவிதங்களை தவிர்க்க அபாய ஒலி அலாரம் பொருத்த வேண்டும்.
அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் போன் எண், இன்ஸ்பெக்டரின் அலைபேசி எண், ரோந்து வாகனத்தின் போன் எண் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பிரச்னை அல்லது குற்றம் நடந்தால் 83000 21100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வீடியோ அல்லது போட்டோ, தொடர்பு எண்ணுடன் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.