ADDED : அக் 29, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் இந்திரஜித்பிரபாகரன் 38. இவர் வி.கள்ளபட்டியைச் சேர்ந்த முத்தையா 70, என்பவரிடம் கடனாக பெற்ற ரூ. 9 லட்சத்திற்கு பாங்க் செக் கொடுத்திருந்தார். பாங்கில் பணம் இல்லாததால் செக் திரும்பியது.
இது குறித்து முத்தையா தொடர்ந்த வழக்கு உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் நடந்து வந்தது. இந்திரஜித்பிரபாகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.9 லட்சத்தை கட்டவும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மகாராஜன் தீர்ப்பளித்தார்.

