ADDED : அக் 29, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
இதில் பங்கேற்ற அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி பவதாரணி, 19 வயது பிரிவு ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வானார்.
நவம்பரில் ஈரோட்டில் நடக்கும் போட்டியில் மதுரை மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ள மாணவியை பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மை குழுவினர் உட்பட பலரும் பாராட்டினர்.

