ADDED : மார் 14, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்கான நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.) டாக்டர் காந்திமதி நாதன் ஜூனில் ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி புதிய ஆர்.எம்.ஓ., நியமனத்திற்கான கலந்தாய்வு வீடியோ கான்பரன்சிங் முறையில் நேற்று நடந்தது.
அரசு மருத்துவமனையில் தற்போது ஆர். எம் ஓ.,வாக உள்ள டாக்டர் ஸ்ரீலதா பணி மூப்பு அடிப்படையில் தோப்பூருக்கு பணியிட மாறுதல் கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்டது.
இதனால் அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., வாக விருதுநகர் அரசு மருத்துவமனை டாக்டர் முருகன் தேர்வானார். இருவரும் ஜூலை 1ம் தேதி பதவி ஏற்கின்றனர்.

