/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டாசு, ஒலிபெருக்கி பயன்படுத்துவதில் சுயகட்டுப்பாடு அவசியம் உசிலம்பட்டி ஆலோசனைக் கூட்டத்தில் யோசனை

ADDED : மே 24, 2025 03:38 AM
உசிலம்பட்டி: 'விழாக்களில் பட்டாசு வெடிப்பது, பேனர், ஒலிபெருக்கி அமைப்பது போன்றவற்றில் சுயகட்டுப்பாடு அவசியம்' என உசிலம்பட்டி ஆலோசனை கூட்டத்தில் யோசனை தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமை வகித்தார். தாசில்தார் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் திலகராணி, ஆனந்த், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், ஒன்றிய துணைக் கமிஷனர் பாண்டி, மண்டப உரிமையாளர்கள், ஒலி பெருக்கி அமைப்பாளர்கள், பிளக்ஸ் பேனர் அச்சகம், பேனர் கட்டும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தாசில்தார் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் விபத்தால் மனித உயிர்கள் பலியாகின்றன. இவற்றை கட்டுப்பாடுடன் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.
டி.எஸ்.பி., சந்திரசேகரன் பேசியதாவது: மேற்கண்ட பிரச்னைகளுக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம், முதல்வரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் செல்கின்றன. இதனால் பாதிப்பது நம் உறவினர்கள்தான். மண்டபம் முன்பதிவு செய்ய வருவோரிடம் பட்டாசு, ஒலி பெருக்கி, பிளக்ஸ் பேனர்கள் கட்டுவது, மண்டபத்திற்குள் ஆடல், பாடல் நிகழ்ச்சி கூடாது என்பது குறித்து விளக்குங்கள்.
போலீஸ், உள்ளாட்சி மன்றங்களிடம் முறையான அனுமதி பெற வலியுறுத்துங்கள். போக்குவரத்துக்கு இடையூறாக ஊர்வலம், இறுதி ஊர்வலத்தில் பூமாலைகளை ரோட்டில் வீசுவது போன்றவற்றாலும் பாதிப்பு ஏற்படும். எனவே சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.