ADDED : நவ 09, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : நாச்சிகுளத்தில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் சார்பில் பெண்களுக்கான ஒரு மாத சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் துவங்கியது. இதற்கான விழாவில் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், வி.ஏ.ஓ., கார்த்திக், டிஜிட்டல் சாதி திட்ட அலுவலர் குளோரி முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். ஊராட்சி தலைவர் சுகுமாரன் துவக்கி வைத்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன், மாவட்ட தொழில் மைய கள அலுவலர் சாமுவேல் ராஜா, திட்ட அலுவலர் ரஞ்சித் குமார், தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் முத்துகிருஷ்ணன், பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி பங்கேற்றனர். பயிற்சியாளர் ஹரிதா நன்றி கூறினார்.