/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விற்பனையாளர் பற்றாக்குறை பொருட்கள் வினியோகத்தில் புகார்
/
விற்பனையாளர் பற்றாக்குறை பொருட்கள் வினியோகத்தில் புகார்
விற்பனையாளர் பற்றாக்குறை பொருட்கள் வினியோகத்தில் புகார்
விற்பனையாளர் பற்றாக்குறை பொருட்கள் வினியோகத்தில் புகார்
ADDED : நவ 12, 2024 05:16 AM
மேலுார்: உறங்கான்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் இருந்தும், விற்பனையாளர் பற்றாக்குறையால் பொருட்கள் வினியோகிப்பதில்லை என ரேஷன் கடை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
உறங்கான்பட்டி ரேஷன்கடையில் 937 கார்டுதாரர்கள் உள்ளனர். இக் கார்டுதாரர்களுக்கு அரிசி மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. கோதுமை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மாதந்தோறும் கடைக்கு வந்தாலும், பல மாதங்களுக்கு ஒரு முறையே சப்ளை செய்கின்றனர்.
இதுகுறித்து கேட்டபோது, ''ஊழியர் பற்றாக்குறையால் ஒருவரே 5 கடைகளில் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் சப்ளை செய்ய இயலவில்லை என்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பொருட்களை வினியோகிக்காமல் ஆவணத்தில் இருப்பு உள்ளது போல் காண்பித்தால் பொருட்கள் அனுப்புவதை அதிகாரிகள் குறைத்து விடுவர். அதனால் கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளர் (குருமூர்த்தி) ஆய்வு செய்து பொருட்கள் விடுபடாமல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக்பாபு கூறுகையில், ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வினியோகிக்க ஏற்பாடு செய்துள்ளேன். சொசைட்டி செயலாளர் மூலம் கூடுதல் விற்பனையாளரை நியமிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.

