/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காவல்துறை செயல் இழந்ததால் தி.மு.க., அமைச்சர்கள் வழக்குகளில் நீதிபதிகள் விலகல் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு

ADDED : டிச 25, 2024 03:45 AM
மதுரை : ''காவல்துறை செயல் இழந்ததால் தி.மு.க., அமைச்சர்களின் வழக்குகளில் நீதிபதிகள் விலகிய சம்பவங்கள் நடந்துள்ளன'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம்சாட்டினார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள சிலைக்கு செல்லுார் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. காவல்துறை செயலிழந்து விட்டது என்பதை உறுதி செய்ய பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி, சாதிக் பாட்ஷா ஆகியோரின் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கூறியது போல தமிழக மக்களுக்கான பொற்கால ஆட்சி நடக்கவில்லை. அவரின் குடும்பத்திற்காக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கும்,- பிரதமர் மோடிக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக அண்ணாமலை கூறுகிறார்.
எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரை போல யாரும் பிறக்கவும் முடியாது. தி.மு.க.,வில் ஸ்டாலினும், உதயநிதியும்தான் ஜொலிக்கிறார்கள். கருணாநிதியைகூட மறந்துவிட்டார்கள்.
அ.தி.மு.க., தனித்து நின்று வெற்றி பெறும் என பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். மாற்றுக் கட்சி கருத்துக்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜி.எஸ்.டி. உயர்த்துவது கண்டனத்திற்குரியது. இதை ஏற்க முடியாது.
இவ்வாறு கூறினார்.