/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசுடன் த.வெ.க.,வும் பொறுப்பேற்கணும் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
/
கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசுடன் த.வெ.க.,வும் பொறுப்பேற்கணும் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசுடன் த.வெ.க.,வும் பொறுப்பேற்கணும் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசுடன் த.வெ.க.,வும் பொறுப்பேற்கணும் செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2025 11:49 PM
மதுரை : ''கரூர் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசுடன், த.வெ.க.,வும் பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் கூட்ட நெரிசல் மரணங்கள் அதிகரித்துள்ளன,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம் சாட்டினார்.
அவர் கூறியாவது: நாடே அதிர்ச்சியுறும் வகையில் கரூரில் சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை. வடமாநிலங்களில் தான் நடந்தது. தமிழக அரசு இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். அது எழுத்தளவில் தான் உள்ளது. த.வெ.க., ஏற்கனவே கூட்டங்கள் நடத்தியுள்ளது. எனவே கரூர் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்திற்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது. நிகழ்ச்சி நடத்திய த.வெ.க.,வினருக்கும் பொறுப்பு உள்ளது. தொண்டர்கள் வருகையை கணித்து அவர்களை போலீசார் முன்னதாகவே கட்டுப்படுத்தியிருக்கலாம்.
த.வெ.க., இதுபோல் பஸ் பயணம் செய்து தொண்டர்கள் சந்திப்பதை மிகவும் விசாலமான இடத்தில் நடத்தலாம் அல்லது தொகுதி வாரியாக சந்திக்கலாம். கூட்டம் நடக்கும் இடத்தில் எத்தனை பேரை அனுமதிக்க முடியுமோ அத்தனை பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். த.வெ.க., தொண்டர்களிடம் கட்டுக்கோப்பில்லை என்பதையே இச்சம்பவம் காட்டியுள்ளது. இனிமேலாவது திட்டமிட்டு கூட்டம் நடத்த வேண்டும். தமிழக மக்களிடையே இது ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப காலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்துபவர் இதுபோன்று பேசக்கூடாது. அ.தி.மு.க., தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவர் இனிமேலும் தரக்குறைவாக பேசினால் பதிலடி கொடுபோம் என்றார்.