/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேயர் இந்திராணி தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்தால் அ.தி.மு.க., புறக்கணிக்கும் செல்லுார் ராஜூ அறிவிப்பு

ADDED : ஆக 28, 2025 11:35 PM
மதுரை: ''ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்த தி.மு.க., நிர்வாகி பொன் வசந்தின் மனைவி இந்திராணி மதுரை மாநகராட்சி மேயராக தொடரலாமா. அவர் பதவி விலகும் வரை கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள்'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: மாநகராட்சி வரி முறைகேட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அ.தி.மு.க., பெற்று தந்தது. சொத்து வரி முறைகேட்டில் அ.தி.மு.க., மட்டுமே முழுமையாக போராடியது. மார்க்சிஸ்ட் கட்சி 'நாங்களும் போராடினோம்' என வெற்று மைதானத்தில் கம்பை சுற்றியது.
மேயர் பதவியில் மனைவி இருந்ததால் பொன் வசந்த் வரி முறைகேட்டில் ஈடுபட்டு அவர் உட்பட 17 பேர் கைதாகி உள்ளனர். வரி முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்று மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும். ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த பொன் வசந்தின் மனைவி மேயராக தொடரலாமா.
அவர் பதவி விலகும் வரை கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டோம். வரி முறைகேட்டில் ஈடுபட்டவரின் மனைவி மேயராக இருக்கும்போது மக்கள் பிரச்னையை அவரிடம் எப்படி பேச முடியும். மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் ரூ.28 கோடியே 21 லட்சம் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேயராக இந்திராணி தொடரும் போது அவரிடம் முறைகேடு தொடர்பாக விசாரிப்பது சரியாக இருக்காது.
மதுரையில் இரண்டு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதியில் டிபன் கேரியரை கொடுத்துவிட்டு மாநகராட்சி வரி முறைகேடுகளை கவனிக்க தவறி விட்டார். அமைச்சர் தியாகராஜன் 'சைலன்ட்' ஆகிவிட்டார். வரி முறைகேடு நடந்ததற்கு இருவரும் காரணமாக இருந்துள்ளனர். இவ்வாறு கூறினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.