நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் விஜயகுமார், ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். தனியார் மருத்துவமனை இயக்குனர் ராமகிருஷ்ணன் பேசினார். மாணவர் சேதுராமன் நன்றி கூறினார். போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியை மாணவர்கள் எடுத்தனர்.