நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதி தின சிறப்பு கருத்தரங்கம் முதல்வர் தேவதாஸ் தலைமையில் நடந்தது. யோகா மாணவி சித்ரா தேவி வரவேற்றார்.
மியூசிய செயலாளர் நந்தாராவ், புத்தரின் அன்பு, கருணை, அமைதி குறித்தும், இக்னோ உதவி பேராசிரியர் முத்தானந்தம், போதி தின முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
குட்லாடம்பட்டி போதி தர்மர் அகில உலக தியான மையம், விஜயமகா விகார டிரஸ்ட் அறங்காவலர் அனுராதா, மன அமைதிக்கு புத்தரின் தியானம் குறித்தும், அக்குபஞ்சர் டாக்டர் பிடல் காஸ்ட்ரோ, புத்தரின் 4 உயரிய உண்மைகள் குறித்தும் பேசினர்.
யோகா மாணவர் விமல் ராஜ்குமார் நன்றி கூறினார்.