ADDED : ஜூலை 11, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சைபர் ஜாக்ரூதா கிளப் சார்பில் 'டிஜிட்டல் உலகில் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, விரிவாக்க செயல்பாட்டு தலைவர் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். போலீஸ் எஸ்.ஐ. க்கள் ராஜா, துரைராஜ் பேசினர். மாணவி சுருதி தொகுத்து வழங்கினார். மாணவர் சந்தோஷ் நன்றி கூறினார். கிளப் தலைவர் ராஜ்குமார் ஒருங்கிணைத்தார். மாணவர்கள் பிரியதர்ஷினி, நிர்மா, மோகனப்பிரியா, மாதேஷ், தனபாலன், சூர்யா, சதீஷ்கண்ணா, வினோத்குமார், சத்தியன், மனோஜ் ராமானந்தமணி ஏற்பாடுகள் செய்தனர்.