ADDED : ஆக 31, 2025 04:42 AM
மதுரை: மதுரை செந்தமிழ் கல்லுாரியில் 'தமிழில் சிறார் இலக்கியங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
மதுரை நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்து கருத்தரங்க ஆய்வுக் கோவையை வெளியிட்டார்., மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி தாளாளர் வரதராசன் பெற்றார். கல்லுாரி முதல்வர் பொறுப்பு) சாந்திதேவி, துணை முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' நாடகத்தை மாணவர் முகமது இஸ்மாயில் இயக்கத்தில் செந்தமிழ்க் கல்லுாரி மாணவர் குழுவினர் அரங்கேற்றினர்.
முதல் அமர்வில் 'என் வகுப்பறையில் இரண்டு டைனோசர்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனும், 2வது அமர்வில் 'சமூக மாற்றத்தில் சிறார் இலக்கியத்தில் பங்கு' எனும் தலைப்பில் எழுத்தாளர் பாலபாரதியும் பேசினர். 3வதுஅமர்வில் 'நவீனத் தமிழ்ச் சிறார்
இலக்கியம்' என்ற தலைப்பில்எழுத்தாளர் உதயசங்கர் பேசினார். துறைத்தலைவர்பூங்கோதை, உதவிப் பேராசிரியர் வேணுகா, இலக்கியப் பேரவை தலைவர் அதிவீரபாண்டியன், நெறியாளர் கோகிலா பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பைந்தமிழ் இலக்கிய பேரவை செய்திருந்தன.

