ADDED : ஜன 03, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் துறை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டு துறை மாணவியருக்கு பட்டய கணக்காளர் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை தலைவர் மஞ்சுளா வரவேற்றார். பத்மராஜன் மேலாண்மை நிறுவன மேனேஜிங் டைரக்டர் பாலன் பேசினார்.
வணிகவியல் துறைத் தலைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.