ADDED : செப் 24, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதி பிரிவு 'காம்கேப்' சங்கம் சார்பில் வருமான வரி ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் தொழில் மேம்பாட்டு சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சிந்து வரவேற்றார். மாணவி ஆரோக்கிய பிரிசிலா துவக்க உரையாற்றினார். கிதியோன் அஸோசியேட்ஸ் பயிற்சியாளர்கள் கிதியோன்பால், ஜான் இம்மானுவல் பேசினர். மாணவர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.