ADDED : அக் 19, 2024 04:36 AM
மதுரை : மதுரையில் சஹோதயா பள்ளிகள் சார்பில் 'கற்றலில் கலையின் ஒருங்கிணைப்பு' குறித்து சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கான தேசிய கருத்தரங்கு நடந்தது.
சி.பி.எஸ்.இ., சேர்மன் ராகுல் சிங் தலைமை வகித்தார். பயிற்சி பிரிவு இயக்குநர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா, செயலாளர் ஹிமான்ஷு குப்தா பங்கேற்றனர்.
மும்பை ஐ.ஐ.டி., துணை பேராசிரியர் ஜினன், ஆங்கில மொழி கற்பித்தலில் கலைகளை ஒருங்கிணைப்பதில் சவால்கள் குறித்தும், சிங்கப்பூர் ஆங்லோ சைனீஸ் ஜூனியர் கல்லுாரி பேராசிரியர் கீதா கிரெப்பீல்டு, சிறப்பு குழந்தைகளுக்கு கற்பித்தலில் கலை ஒருங்கிணைப்பு குறித்து பேசினர்.
கடம்பவனம் கலாசார மைய நிர்வாக இயக்குநர் சித்ரா, ரப்சோடி நிறுவனர் அனில் ஸ்ரீநிவாசன், ஷட்டில்ஸ் அன்ட் நீடில்ஸ் வீவிங் ஸ்டூடியோ நிறுவனர் நரேஷ் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் அமர்வில் கிரீடா கேம்ஸ் நிறுவனர் வினிதா, ஜவுளிக் கலையை கணிதத்துடன் ஒருங்கிணைத்தல் குறித்து பேசினார். புகைப்படக் கலைஞர் அமர் ரமேஷ், உலக கதை சொல்லும் நிறுவன இயக்குநர் எரிக் மில்லர் உட்பட பலர் பங்கேற்றனர். சஹோதயா பள்ளிகள் தலைவர் பரம கல்யாணி, செயற்குழு உறுப்பினர் ஹம்சபிரியா ஒருங்கிணைத்தனர்.

