ADDED : ஆக 07, 2025 05:03 AM
மதுரை, மதுரை அருப்புக்கோட்டை ரோடு ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் ஒரு பகுதியாக, 'வங்கித் துறையில் புதிய பரிணாமங்கள்' என்ற தலைப்பில் இயக்குநர் சுப்ரமணியன் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.
சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த் பேசியதாவது: சேமிப்பு கணக்குகள், கடன்கள், செல்வ மேலாண்மை, பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் மூலம் வங்கிகள் உலகளாவிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சைபர் பாதுகாப்பு, ஒழுங்குமுறை சிக்கல்கள், குறைந்த வட்டி விகிதங்கள் உள்ளிட்ட சவால்கள் வங்கித் துறையை உற்சாகமாக கடந்து செல்ல வைக்கிறது. ஏ.ஐ., பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பங்கள் வங்கிச் செயல்திறன், வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. வங்கிகள் தற்போது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை காரணிகளை தங்கள் நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்க அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்றார்.
பேராசிரியர்கள் சேகர், புகழேந்தி ஒருங்கிணைத்தனர். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.