நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் கலப்பின முறையில் இந்திய அறிவு பாரம்பரியம், ஹிந்தி மொழி குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
நேபாள பேராசிரியர் கீதா குமாரி தலைமை வகித்தார். காந்தி கிராம பல்கலை இணைப் பேராசிரியர் கந்தரே சந்து, மகாராஷ்டிரா நாராயண ராவ் வாக்மரே, திருப்பதி ஓரியன்டல் கல்லுாரி பேராசிரியர் மாதவி பேசினர். சவுராஷ்டிரா கல்லுாரிச் செயலாளர் குமரேஸ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் சீனிவாசன், துறை தலைவர் ரோகிணி பாண்டியன் கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.