நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் வந்தே மாதரம் குறித்த கருத்தரங்கு நடந்தது. செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.
முதல்வர் தேவதாஸ் 'வந்தே மாதரம் சகிப்புத்தன்மையின் அடையாளம்' எனும் தலைப்பிலும் கல்வி அலுவலர் நடராஜன் 'வந்தே மாதரம் ஒற்றுமையின் அடையாளம்' எனும் தலைப்பிலும் தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன் 'தேசபக்தியின் அடையாளம்' என்ற தலைப்பிலும் பேசினர். மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

