/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவ.21ல் பெண் தொழில் முனைவோர் மாநாடு
/
நவ.21ல் பெண் தொழில் முனைவோர் மாநாடு
ADDED : நவ 12, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் பெண் தொழில்முனைவோர் அமைப்பின் (வீ) சார்பில் நவ.21ல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் பெண் தொழில்முனைவோர் மாநாடு நடக்கிறது.
தலைவர் ராஜகுமாரி கூறுகையில், ''ஆப்பரேஷன் சிந்துாரில் பங்கேற்ற கர்னல் பூனம் தேவ்கன், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். பல்வேறு தலைப்புகளின் கீழ் பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது. வீ சார்பில் புதிதாக தொழில் முனைவோருக்கு வழிகாட்டுகிறோம்'' என்றார்.
வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், வீ துணைத்தலைவர் லதா, செயலாளர் மகேஸ்வரி, இணைச் செயலாளர் சித்ரா பங்கேற்றனர்.

