/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கோட்டையன் விவகாரம் செல்லுார் ராஜூ மழுப்பல்
/
செங்கோட்டையன் விவகாரம் செல்லுார் ராஜூ மழுப்பல்
ADDED : பிப் 12, 2025 04:07 AM
மதுரை : ''செங்கோட்டையன் விவகாரத்தில் பழனிசாமி பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தி.மு.க., அரசு திட்டமிட்டு செய்துள்ளது'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம்சாட்டினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: 100 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அத்திகடவு -- அவினாசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பழனிசாமி முடித்து வைத்துள்ளார். 4 ஆண்டுகள் 3 மாதம் ஆட்சி செய்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு பழனிசாமி ஆட்சி செய்தார்.
இந்த விவகாரத்தில் அவரது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தி.மு.க., அரசு திட்டமிட்டு செய்துள்ளது. அ.தி.மு.க., கட்சியையோ, பொதுச்செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம் தான் சொல்லியுள்ளார். இதனால் கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார். இதற்கு பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது என்றார்.

