/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெ., இருக்கும்போதே முதல்வராக ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்; திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்
/
ஜெ., இருக்கும்போதே முதல்வராக ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்; திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்
ஜெ., இருக்கும்போதே முதல்வராக ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்; திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்
ஜெ., இருக்கும்போதே முதல்வராக ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்; திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறார்
ADDED : நவ 02, 2025 03:42 AM
மதுரை: ''பழனிசாமி முதல்வராக வந்ததற்கு யாரும் பின்புலத்தில் இல்லை. ஜெ., இருக்கும்போதே முதல்வராக வரவேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டதை நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெ.,விடம் தெரிவித்ததால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது,'' என மதுரையில் அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட சிலைக்காக அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை குருபூஜை விழாவிற்காக மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு நேற்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:
தி.மு.க.,வின் 'பி' டீம் யார் என்பதை பழனிசாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும். ஜெ.,வால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகி தினகரன். அவர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. பழனிசாமிக்கு முன்பாக பிறந்துள்ளவர் என்ற ஒரு தகுதியை மட்டும் செங்கோட்டையன் பெற்றுள்ளார். அதை தவிர அனைத்து தகுதிகளையும் பழனிசாமி பெற்றுள்ளார்.
முதல்வர் வாய்ப்பு 2 முறை வந்ததை செங்கோட்டையன் ஏன் விட்டுக் கொடுத்தார். யாராவது முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார்களா. பிக்பாக்கெட் அடிப்பது போல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள். பழனிசாமி முதல்வராக வந்ததற்கு யாரும் பின்புலத்தில் இல்லை. ஜெ., இருக்கும்போதே முதல்வராக வரவேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டதை, நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெ.,விடம் தெரிவித்ததால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
கோடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை இப்பவே பிடித்து உள்ளே போடுங்கள். நாங்களா வேண்டாம் என்கிறோம். கோடநாடு வழக்கில் சட்டத்தின் படி பழனிசாமி குற்றவாளியாக இருந்தால் கைது செய்திருக்கலாமே. தி.மு.க.,வுக்கு திராணி இருந்தால் 5 ஆண்டுகளில் இதை செய்திருக்கலாமே.
பொறுத்திருந்து பாருங்கள் சசிகலா, செங்கோட்டையன், பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அ.தி.மு.க., சட்டப்படியும், பொதுக்குழு முடிவின்படியும் நீக்கப்பட்டவர்கள். அவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சசிகலா போல நானும் சொல்கிறேன். 'வெயிட் அண்ட் சீ'. இவர்களின் வாழ்க்கை 3 மாதங்களில் என்ன ஆகப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள்.
பழனிசாமி வசம் 75 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சசிகலா, தினகரனிடம் ஒருவராவது உள்ளாரா. 2021 சட்டசபை தேர்தலில் அவர்களின் துரோகத்தால் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. அ.தி.மு.க.,வில் துரோகிகள் நீக்கப்படுவதால் நாங்கள் பலவீனமாக இல்லை. பசும்பொன்னிற்கு பழனிசாமியுடன் செங்கோட்டையன் வந்திருக்க வேண்டும். பன்னீர்செல்வம், தினகரன் தேவராக உள்ளபோது கொங்கு வெள்ளாள கவுண்டரான செங்கோட்டையனை அழைத்துச் சென்று உரிய மரியாதை கொடுக்கவில்லை.
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் ராஜாவாக இருந்தார். ஆனால் துரோகிகளிடம் சேர்ந்து கூஜா துாக்கச் சென்றுள்ளார். பதவியில் இருந்தால் மட்டுமே மரியாதை. அவரை கட்சியில் இருந்து நீக்கியது நுாற்றுக்கு நுாறு சரி. கட்சி என்றால் ஒரு 'டிஸிபிளின்' வேண்டும். அந்த 4 பேரும் ஒன்று சேர்ந்ததால் தென் மாவட்ட ஓட்டுக்கள் பாதிக்காது.
இவ்வாறு கூறினார்.

