/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூஜ்ஜியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது; பன்னீர்செல்வம் மீது உதயகுமார் கடும் தாக்கு

ADDED : நவ 02, 2025 03:43 AM
மதுரை. நவ.2-: ''பசும்பொன்னில் திட்டமிட்ட அரசியல் நாடகத்தை யதார்த்த நாடகமாக அரங்கேற்றி ஒரு நாள் பரபரப்பு செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள். அரசியலில் பூஜ்ஜியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக வரலாறு கிடையாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வின் விசுவாசமுள்ள தொண்டர்கள் உழைப்பால், ஜெ., உத்தரவால் மூன்று முறை முதல்வராக இருந்த 'அ.தி.மு.க.,வின் விசுவாச தலைவர்' என்று கூறிவருபவர், தி.மு.க., மீண்டும் 2026ல் ஆட்சிக்கு வரும் என்று வாய் கூசாமல் கூறுகிறார். தனக்கு பதவி இல்லை என்பதற்காக கோயிலாக உள்ள தலைமைக் கழகத்தையே சுக்கு நுாறாக அடித்து உடைத்து சிதைத்தார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நடை பயிற்சியிலே யதார்த்தமாக சந்தித்து பின் வீட்டிற்கே விருந்தாளியாக சென்று தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பா பாடினார்.
விளையாட்டு மைதானத்தில் ஸ்டாலின் மருமகனை சந்தித்து மீண்டும் ஆட்சிக்கு அச்சாரம் போட்டார். அதிகாரத்திற்காக ஜெ., கொடுத்த அடையாளத்தை தொலைத்துவிட்டு வீதியில் உள்ளார்.
பசும்பொன்னில் திட்டமிட்ட அரசியல் நாடகத்தை யதார்த்த நாடகமாக அரங்கேற்றி ஒரு நாள் பரபரப்பு செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள். அரசியலிலே பூஜ்ஜியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியங்கள் அமைத்ததாக வரலாறு கிடையாது. தொண்டர்களும், மக்களும் இந்த துரோக நாடகத்தை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.