/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., தொகுதி பொறுப்புக்குழு மூத்த நிர்வாகிகள் அதிருப்தி
/
பா.ஜ., தொகுதி பொறுப்புக்குழு மூத்த நிர்வாகிகள் அதிருப்தி
பா.ஜ., தொகுதி பொறுப்புக்குழு மூத்த நிர்வாகிகள் அதிருப்தி
பா.ஜ., தொகுதி பொறுப்புக்குழு மூத்த நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : அக் 23, 2025 11:36 PM
மதுரை: தமிழகத்தில் சட்டசபை தொகுதி வாரியாக 234 தொகுதிகளுக்கும் பா.ஜ., சார்பில் அமைக்கப் பட்டுள்ள பொறுப்பாளர்கள் குழு மீது மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து பா.ஜ.,வில் கட்சி அமைப்பை பலப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர் என மூவர் குழுவை 234 தொகுதிகளுக்கும் அறிவித்துள்ளது.
இந்நியமனத்தின் மீது பலமூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலின் போதும் ஒவ்வொரு தொகுதிக்கும், அத்தொகுதிக்குள் இருக்கும் சட்டசபை தொகுதிக்கும் பொறுப்பாளர் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் உள்ள பலர் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதியிலோ, பிடிக்காத வேட்பாளர் என்றாலோ பணியாற்றாமல் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். இதுகுறித்து யார் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதேசமயம் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு வேலை செய்ய மறுத்தவர்களுக்கு இப்போதும் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
இதேபோல, அத்தேர்தலில் எழுந்த முக்கிய பிரச்னை, நிதி மேலாண்மை. பா.ஜ., மேலிடத்தில் இருந்து தொகுதி வாரியாக அனுப்பிய தேர்தல்செலவு பணத்தை நிர்வாகிகள் பலர் முறைகேடு செய்தனர். இது தொடர்பாக திருமங்கலம் தொகுதியில் நிர்வாகிகளே போஸ்டர் அடித்து ஒட்டி, பிரச்னை பூதாகரமானது.
புகாருக்குள்ளானவரும் நியமனம் தேர்தலுக்கு பின் சென்னை கமலாலயத்தில் நடந்த கூட்டத்திலும் இதுபற்றி புகார்கள் குவிந்தன. அப்போதைய தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் பேசினர். இதுகுறித்தும் மேலெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்டோருக்கு பொறுப்புக்குழுவில் இடம் கிடைத்துள்ளது என்கின்றனர் கட்சியினர்.
இதனால் முறையாக பணியாற்றியவருக்கும், முறைகேடாக பணியாற்றியவருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது மூத்த நிர்வாகிகளின் கேள்வி. அண்ணாமலை ஆதரவாளர்களும் இந்த பொறுப்புக்குழுவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குமுறல் எழுந்துள்ளது.

