ADDED : ஜூலை 10, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டம் பனையூர் சோனை. இவர் நெடுங்குளத்தில் வீடு கட்டுமானத்திற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி 2015ல் பனையூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அதற்குரிய கட்டணத்துடன் ரூ.3500 லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என இளநிலை பொறியாளராக இருந்த சந்திரன் கூறினார். சோனை மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் சந்திரனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். சந்திரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.