ADDED : செப் 27, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் டி.கல்லுப்பட்டி வட்டார விவசாயிகள் காரீப் பருவத்தில் தாங்கள் சாகுபடி செய்துள்ள மக்காசோளம், பாசிப்பயறு, பருத்தி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு மக்காசோளத்திற்கு ரூ.588, பருத்தி பயிருக்கு ரூ. 200-, பாசிப்பயறுக்கு ரூ.308- காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். செப். 30 ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தேசிய வங்கிகளிலும், பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு செய்யலாம். நடப்பு பருவ அடங்கல், கணினி சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும் என உதவி இயக்குனர் விமலா தெரிவித்தார்.